உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அஞ்சலி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா

அன்றும் என்றும் போல்தான் பொழுது விடிந்தது. வழக்கமாய் ஏகாவுக்கு எப்படி விடியுமோ அப்படி.

“ஏகா, ஏகா, எழுந்திரேண்டி! ஏ ஏகா, ஏகா—ஐயோ திரும்பிப் படுத்துட்டாளே! ஏகா, கண்ணைத் திறவேண்டி—! ஐயோ, இவளை எழுப்பி எழுப்பி மானம் போறது, பிராணன் போமாட்டேன்கறதே! ஏ—கா!”

“கா—கா!” காகங்கள் கேலி செய்தன.

ஏகாவை எழுப்புகிறேன் என்றால் அர்த்தமில்லை. ஒவ்வொரு சமயமும் சதைபோல் அவளை உறக்கத்திலிருந்து பிய்த்தாக வேண்டும்.

ஆனால், ஏகா எழுந்தபின் அவள் உறங்குவதோ, அவளை உறங்க வைப்பதோ, அவளை எழுப்புவதைவிடக் கடினம். புகைவண்டி வேகமெடுப்பதுபோல்தான். வேக மெடுக்கும் வரைதான் மெது. எடுத்தபின்...!

“ஏகா, இன்னும் என்ன பண்றேடி, ராத்திரியைப் பகலாக்கிண்டு? துணி தைக்க இதான் நேரமா?”

“உங்களுக் கென்னவாம், திரும்பிப் படுத்துக்கோங்கோ!”

“விளக்கு வெள்ளை முழியில் ஆயிரம் ஊசி குத்தற தேடி!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/233&oldid=1033519" இலிருந்து மீள்விக்கப்பட்டது