பக்கம்:அஞ்சலி.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228 லா. ச. ராமாமிருதம்

நிறம். இல்லை, இவன் கண்ணிலே பழியா? என்னதான் வேளைமேல் பழி போட்டாலும் இப்படி ஒரு கண்கட்டு வித்தை—இதென்னடியம்மா எல்லாம் அசுர மாயையா இருக்கே? வருஷம் எட்டானாலும் (அட, எட்டும் ஆயிடுத்தே ஆகட்டுமே!) மறக்கமாட்டேன். துரை யாட்டம் என் பிள்ளை, கோட்டையும் சூட்டையும் மாட்டிண்டு, மோட்டார் வண்டியில்லாமல் கோவிலிலிருந்து கால் நடையா நடந்து வந்த மாப்பிள்ளைக் கோலத்தை காந்தவிளக்குக்குச் சொல்லித்தான் வெச்சேன் சம்பந்தியம்மா, ஆனால் விளக்குத் திரி ஊரிலேயே இல்லேயே!’ ஏன், படுபாவி திரிக்காரன் பத்தியெரிஞ்சு போயிட்டானா? நடக்கிறது கலியாணம்னு தெரிய “பீப்பீ”ன்னு வெச்சானே பிராம்மணன், அந்த மட்டுக்கும் திரியோடு அம்பட்டனும் காணாமல் போகாமல் இருந்தானே! ஏகா, ஒண்னு நான் ஒப்புண்டுதான் ஆகனும், உங்கப்பாவின் கெட்டிக்காரக் கெட்டித் தனத்துக்கு அவர் ஒரு யுக புருஷன்தான்! உலகத்துக்கொரு மனுஷன். அவர் வெச்ச பேரும் அவர் மாதிரியே—ஏகாவாம் ஏகா!”

“ஏகா, இதென்ன பேர், ஆண்பிள்ளை மாதிரி!”

“ஒ அதுவா? அம்மா என்னை உண்டாயிருந்தப்போ அப்பாவுக்குக் காஞ்சிபுரத்துக்கு மாற்றலாகி இருந்தது. கழுதையானாலும் காஞ்சியில் பிறக்கணுமாமே? நான் காஞ்சியில் பிறந்தவள்—உங்களுக்குத் திரட்டுப்பால் பிடிக்காதா? அப் படி யே வெச்சுட்டேளே, நான் தின்னூட்டமா?”

எடுத்துக்கோயேன் என்னைக் கேக்கணுமா?” காஞ்சியில் பிறந்தாய்; பிறகு?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/238&oldid=1033522" இருந்து மீள்விக்கப்பட்டது