பக்கம்:அஞ்சலி.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 229

“ஓ அதுவா?” ஏகா வாய் நிறையத் திணித்துக் கொண்டு வார்த்தைகள் கமமின. “அம்மா என்னை உண்டாயிருந்தப்போ, இந்தத் தடவை பிள்ளை தான்னு அப்பாவும் அம்மாவும் நிச்சயம் பண்ணிண்டுட்டா. ‘ஏகாம்பரம்’னு பேரையும் தீர்மானம் பண்ணியாச்சு, அமாவாசைக்கு மூணு நாளில் நடுநிசி. குழந்தை விழுந்து வீறிட்டதும், கூரையிலிருந்து காரை உதிர்ந்ததாம் என் பாட்டி சொல் இது.

‘என்னது? என்னது?’

அப்பா திண்ணையிலிருந்து ஓடி வந்தார்.

“ஏண்டா குடல் தெறிக்கறதே? லங்கிணி பெத்தது லங்கிணியேதான்” என்று பாட்டி என்னை ஏந்திவந்து காட்டினதும், அப்பா முகத்தைப் பாட்டி சொல்லிக் காட்டும் ஒரொரு தரமும் அப்பா உள்பட, அம்மா தவிர, நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.

“ஆனால் அப்பா: ‘நான் நினைத்தது நினைத்தபடி நடக்காவிட்டாலும் நான் சொன்னது சொன்னதுதான்; என் சொல் வீணாகக்கூடாது’ என்று எனக்கு ஏகாம்பரி என்றே பேரை வெச்சுட்டார். ஆண் ஆண் என்று எண்ணி எண்ணி ஆண் போலவே வாளிப்பாய் தலை நிமிர்ந்து ஒரு பெண். அம்மா சொன்னால் தலை குனிந்துவிடுமா?

“நான் பெண்ணாய்ப் பிறந்ததை அம்மாவால் மன்னிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்... ‘தலை குனி’ தலைகுனி யென்று அவள் என் முகத்தைத்தான் மெறித்துக்கொண்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/239&oldid=1026643" இருந்து மீள்விக்கப்பட்டது