பக்கம்:அஞ்சலி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234 லா. ச. ராமாமிருதம்

வட்டம்மாதிரி விழி மருட்சி. ஒரு சமயம்போல் இல்லை. நான் தலையை அசைத்தால் போதும், புறா மடியில் விழுந்துவிடும்—)

“என்ன வாயடைச்சுப் போச்சு?”

அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்ன முழிக்கிறேள்?”

அவன் முகம் வெளிறிட்டது. “ஒன்றுமில்லையே, என்ன செய்தேன்?”

அவன் காதைத் திருகினாள். “நீங்கள் என்ன செய்தாலும் என்னிடம் தப்ப முடியாது.”

முதுகுத்தண்டில் பாம்பு நெளிந்தது.

ஏகா உண்மையில் மக்கோ? எல்லாம் தெரிந்த பாஷையில் இப்படிப் பேசுகிறாளே!

அல்ல, மண்டையோட்டினுள் மின்னலா?

எப்படியிருந்தாலென்ன? விடிந்ததுகூடத் தெரியாமல் இந்தக் கரடித் தூக்கம் தூங்கும்வரை ஏகா மக்கு மக்கு தான்.

நல்ல பெண்,

மக்குப் பெண்!

“ஏகா! எழுந்திரேண்டி!”

“ஏ—கா!”

“கா—கா”

காகங்கள் கேலி செய்தன.

அன்றும் என்றும்போல்தான் பொழுது விடிந்தது.வழக்கமாய் ஏகாவுக்கு எப்படி விடியுமோ அப்படி. இல்லை நேரம் கூடவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/244&oldid=1033525" இலிருந்து மீள்விக்கப்பட்டது