பக்கம்:அஞ்சலி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246 லா. ச. ராமாமிருதம்

ஏகா, மசிந்தவன் நானே.

“உன் எண்ணத்தில் நீ அழிஞ்சுபோயிடுவே. அழிஞ்சே போயிடுவே, ஆமா, சொல்லிட்டேன்.”

ஏகா, நான் அழியும் பாக்கியம் எனக்கில்லையே!

அவ்வார்த்தையில் தோய்ந்த ஏக்கம், அதன் பிம்பம் எல்லையற்ற துக்கம் அவள் நெஞ்சு கேவிற்று.

“ஏன் அழியமாட்டாய்? நீ கடவுளா?”

கும்மட்டியில் ஜ்வாலைகள் சீறி எழுந்தன.

ஒன்றுடன் ஒன்று நெய்து ஒன்றிக் குவிந்தன.

“ஏன் வாயடைச்சுப் போச்சு? நீ கடவுளா?”

மனிதன் என்னைக் கடவுள் என்றதால் நான் கடந்தவனாகி விடமாட்டேன்.

“பின் நீ யார்?”

என்னைப்பற்றி என்னென்று சொல்ல?

நான் எண்ணங்களின் அஸ்து.

மனிதன் பிறக்கவும், பிறந்தபின் இறக்கவும் பயந்து, தனக்குத் துணை நிற்க, தன் எண்ணத்தை ஜபித்து, ஜபத்தில் எனக்கு உருவேற்றித்தான் அண்ணாந்த அந்தரத்தில் என்னை ஏற்றிவிட்டான். தன் மரண பயத்தில் எனக்கு நித்தியத்தைத் தந்தான். தன் பத்திரத்திற்கு அவன் நியமித்தபடி, எங்கும் நிறைந்து எல்லையற்று, அப்படியும் அவன் தம்ப முடியா அவன் குறைவின் வடிப்பாய், எங்கும் நிறைந்தும், எல்லை கடந்தும் என் தனிமையில், எனக்கென்று உரிய என் தன்மையில், உயிர்ப்பிண்டமாய் எப்பவும் துடித்தபடி இயங்குகிறேன். உன்னையடைந்ததில் என் விதியின் நிவர்த்தியை உணர்கிறேன்.

“என்ன உளறுகிறாய்? உன்னை நான் கண்ணால் கூடக் கண்டது இல்லை. இப்பக்கூட பயங்கொள்ளியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/256&oldid=1026731" இலிருந்து மீள்விக்கப்பட்டது