ஏகா 251
ஏகாவின் முகத்தின்மேல் டாக்டர் வைத்த விழி மாறவில்லை. எழுதினாற்போன்று முகம் அசைவற்று அமைதியில் பிதுங்கிற்று.
“I don't know. இவங்க இதயத்தையும் சுவாசப் பையையும் இரும்பால் அடிச்சுப் போட்டிருக்குது. உடல் ஆரோக்யம் அதுவே ஒரு அதிசயம்போல் Plusஇல்தான் இருக்குது. ஆனால் அவங்களே சொன்னமாதிரி, என்ன தான் கண்டுபிடித்தாலும் நமக்குத் தெரியாது இன்னும் எத்தினி எத்தினியோ!”
“டாக்டர், என்ன செய்யலாம்?”
“வேணுமானால் தூக்கத்திற்கு ஊசி போடறேன். எழுந்தால் எப்படியிருக்காங்க பார்க்கலாம்.”
கும்மட்டியில்
செந்தாமரை விரிந்தது.
ஆயிரம் தழல்கள்
ஆயிரம் இதழ்கள்
மலர் நடுவே தணல் கனிவு
நிர்மல நீராய்
தேங்கி நின்றது.
“பா! பா!! பா!!!”
மேயப்போயோ, அறுத்துக்கொண்டோ, கொட்டிலில் வந்து சேராத மாட்டையோ, கன்றையோ தேடிக் கொண்டு, தெருவில் எவனோ குரல் கொடுத்துக்கொண்டு செல்கிறான்.
அறையில் சூழ்ந்த அந்தியிருளில், அக்கூவல் அவளை எட்டுகையில், அதன் அந்தரங்கம் ததும்பும் கொஞ்சல், கடலோரம் நடுநடுங்கும் அலைநுரையில் மிளிரும் சோகம்,