பக்கம்:அஞ்சலி.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 255

“வாலும் தலையாய், இரு விழிகளிலும் இருதலைகள் எட்டிப் பார்க்கின்றன.”

“காலைச் சுற்றின பாம்பு.”

என்னைக் கடித்த பாம்பு.

கடித்து என்னை விழுங்கிவிட்ட பாம்பு

“ஏகா நீ இன்று கும்மட்டியில் ஏற்றிய நெருப்பு இன்னும் எரிந்துகொண்டேயிருக்கிறது.”

“என் நெருப்பு.”

“அம்மா என்ன அனைத்துப் பார்த்தும் முடியவில்லை. ஜ்வாலைகள் சீறுகின்றன!”

“என் நெருப்பு.”

“ஏகா! நாம் இனியும் பழையபடி இருக்கமுடியுமோ! அந்தரங்கம் அழிஞ்சுபோச்சே!—”

பதில் இல்லை.

“ஏகா? ஏகா?”

“யாரது?”

“.........”

இறுக மூடிக்கொண்ட விழிமுகட்டின் வளைவின்மேல் ஒரு பம்பரம் பெரிதாகிக்கொண்டே தோன்றிற்று. அது சுழன்ற வேகத்தில் அது தூங்கிற்று. அதைச் சுற்றி இருள் மின்னல்கள் கடைந்தன.

“போய்விடு! என்னை விட்டுப் போய்விடு!—”

மோனாகாரம் அவள்மேல் இடிந்தது.

என்னை எங்கே போகச் சொல்கிறாய்? நான் இல்லாத இடத்தைக் காட்டு, நான் போக!

“உன் தனிமைக்காக என் தனித்தனத்தை நான் இழக்கவே மாட்டேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/265&oldid=1033541" இருந்து மீள்விக்கப்பட்டது