பக்கம்:அஞ்சலி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தரங்கிணி 17


அவன் பெருமூச்செறிந்தான். அவளுடைய பதிலுக்குக் காத்திராமலே, “ஆனால் நீ எனக்கு ரொம்பவும் வேணும்; நீ இல்லாவிட்டால் நான் இல்லை. சில சமயங்களில் நான் உன்னைத் தொடுவதுபோல் எனக்கு ஒர் உணர்ச்சி ஏற்படுகிறது.”

அவள் அவன் கையைப் பற்றினாள். அவன் இருளில் புன்னகை புரிந்தான்.

“நாம் ஒருவரை யொருவர் தொடும்போதெல்லாம் தொடுகிறோம் என்று அர்த்தமில்லை. ஒருவரையொருவர் நெரியக் கட்டி, அதனால் மூச்சுத் திணறினால்கூட நாம் தோட்டுக் கொள்வதில்லை; ஆனால், நீ எட்டவிருக்கையில், என் கண்ணெதிரில்கூட இல்லாமல் என் நினைவு கூட இல்லாமல், நீ ஏதோ வேலையாய் இருக்கையில், அச்சமயம் நான் உன்னைப் பார்க்கவோ நினைக்கவோ நேர்கையில், நான் எப்படியோ உன்னோடு இழைத்துவிடுகிறேன். அந்தச் சமயங்களில் எனக்கு மனசில் ஒர் அலாதி அமைதி ஏற்படுகிறது. உன்னிடம் எப்படியும் ஒரு குளுமை இருக்கிறது. நமக்குக் கல்யாணமாகிப் பத்து வருஷங்களாகின்றன. ஆனால், அவ்வப்போது கிட்டும் இந்த அமைதியிலோ, குளுமையிலோ அதை நான் அதுபவிக்கும் நிறைவிலோ ஒர் எள்ளுக்கூடக் குறையவில்லை. தனியாய் இருந்திருக்கிறேன். இனியும் நேர்ந்தாலும் இருப்பேன். தனியாயிருக்கலாம்; ஆனால் தனிமையாயிருத்தல்—அப்பா...!” பயங்கரத்தில் அவன் சிவிர்த்துக்கொண்டான்.

அவள் அவனை அனைத்துக்கொண்டாள்.

“உங்களைச் சில சமயங்களில் எனக்குப் புரியல்லே... ஆனால் நீங்கள் படும் கஷ்டத்தை சகிக்கவும் முடியல்லே. நீங்கள் என்ன படுகிறீர்களோ அதை உங்களிடமிருந்து வாங்கிக்கொண்டுவிட நான் என்ன செய்யனும்?”

அ —2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/27&oldid=1033388" இலிருந்து மீள்விக்கப்பட்டது