தரங்கிணி 21
“நான் உன் அப்பனோ இல்லையோ, நீதான் என் மகன்.”
“நான் அப்புறம் இன்னமும் என் தாயைக் காணப்போகிறேன். அப்பாதான் எனக்குச் சமைத்துச் சாதம் டோடுவார். நான் என்னிடம் போய்ச் சேர்ந்த சமயத்தில் அவருக்கு ரொம்ப நெருங்கியவர்கள் இறந்தோ அல்லது தூரதேசமோ போய்விட்டார்கள். அவரும் அவருள் என்ன விரக்தியோ தெரியவில்லை. ஸ்திரி இல்லாத ஆணாகவே இருந்துவிட்டார். அவர் அப்படி இருக்க வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் அவர் ஏன் அப்படி யிருந்தார், யார் மாதிரி இருக்க முயன்றார் என்று எனக்கு இன்னும் தெளிவாகப் புரியவில்லை. அப்பாதான் எனக்கு வாத்தியார். பகல் முழுவதும் உழைப்பில் ஊன்றியிருந்து விட்டு இரவு வந்ததும் பாடம் சொல்லிக் கெர்டுப்பார். என்மேல் அவருக்கிருந்த பாசத்தை எனக்கே முழுக்க முழுக்க அறிந்துகொள்ளவும் பயமாயிருக்கிறது.
“சில சமயங்களில் அவர் என்னை, வயதாகியும் மடி மீது வைத்துக்கொண்டு, நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு விட்டேன். தன்னந்தனியாகி விட்டேன். ஆனால் அன்று நீ கதவை இடித்து உன் குழந்தை முகம் நிமிர்த்தி என்னை ‘அப்பா, நீதானா என் அப்பா?’ என்று கேட்டதிலிருந்து எனக்கு மறுபடியும் நம்பிக்கை வந்துவிட்டது. நான் உனக்காகக் காத்திருந்த நாளெல்லாம் வீணாளில்லை அல்லவா? இனிமேல் நான் இறந்தாலும் சரி, அல்ல இதுவரை எனக்கு நேர்ந்த சோதனைகள் போதாதென்று நீயே என்னை முந்திக்கொண்டாலும் சரி, நான் வாழ்க்கை பலனில்லை என்று இனி சொல்லமாட்டேன்’ என்பார். அவர் சொல்வது புரியாது, ஆனால் இன்பமா யிருக்கும்.
“என் தந்தையும் நானும் அண்ணன் தம்பிகள். அவர் பக்கத்தில்தான் படுப்பேன். அவர் உடம்பெல்லாம் அன்பு தான் ஒடிற்றே யொழிய இரத்தம்கூட ஒடவில்லை, சில