தரங்கிணி 23
சுவாமி பூதங்களில் எனக்கு இருந்த நம்பிக்கைகள் எல்லாம் அன்று முறிந்துபோயின. நம்பிக்கைகள் முறிந்தபின் மனிதனுடைய தனிமை தாங்கக்கூடியது அல்ல. முறிந்த நம்பிக்கையைத் திரும்ப அப்படியே பெறுவது என்பதும் இல்லை.
“குழந்தை குழந்தையென்று நீ ஏங்குகிறாய். ராமே சுவரம், அரசமரம் என்று இன்னும் உன்னைப்போல் எத்தனையோ பேர் தேடியலைகிறார்கள். என்னத்தைத் தேடுகிறார்கள்? எதற்கு? எனக்குச் சிரிப்பு வருகிறது. அவர்களைப் பார்த்தால் வெறுப்பாய்க்கூட இருக்கிறது. நான் என் அப்பனுக்கு எம்னாயிருந்தேன்.”
அவனுக்குக் கமற ஆரம்பித்துவிட்டது. சிகரெட்டைப் பற்றவைத்துப் பலமாய் இழுத்தான்.
தரங்கிணி மெளனமாய் அழுதுகொண்டிருந்தாள்.
“ஏ, தரங்!”
அவன் குரல் உள் அறையினின்று எழுந்தது
ஓவ்!”
தரங்கினி வெளியறையில் பெட்டியிலிருந்து துணி மணிகளையெடுத்து அலமாரியில் அடுக்கிக்கொண்டிருந் தாள்.
“உனக்குப் பிடிக்கவில்லையோன்னோ?
“எது?”
முகத்தில் சோப்பு நுரையுடன் கையில் கத்தியை ஏந்தியவண்ணம் அவன் வெளியே வந்தான். உதட்டோ ரங்கள் குறுநகையில் குழிந்திருந்தன.
“இந்தமாதிரி—நான் தான் என் உத்தியோகத்தில் ஊர் ஊராய்ச் சுற்றவேண்டி யிருக்கிறதென்றால் உன்னையும்