பக்கம்:அஞ்சலி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பஞ்சபூதக் கதைகள்

இக் கதையையும், இந்த அடுக்கில் நான் எழுதவிருக்கும் மற்றக் கதைகளையும் என் இளைய சகேரதரிக்குப் பக்தியுடன் சமர்ப்பித்துக்கொள்கிறேன். இருந்தவரையில், அவள் இக்கதையின் பின்னணியில் பாயும் காவிரியேபோல் கன்னியாகவும், தாய்மை நிரம்பியவளாயும், களங்கமற்றவளாயும், எல்லாம் தெரிந்தவளாயும், பாரியாகவும் இயங்கிவிட்டு பிறகு அஸ்திபூர்வமாக சமுத்திரத்தில் கலந்து நித்யையாகிவிட்டாள்.

எங்கும் நிறைந்த பேருயிரில் இப்பொழுது அவள் உறைவதால் என் சமர்ப்பணத்தை அவள் ஏற்றுக் கொள்கிறாள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனெனில், இக்கதையைப் படிப்பவர் என் சத்துருக்களோ, மித்துருக்களோ, எவராயிருப்பினும் சரி, அவரை அது எப்படிக் கிளறினும்-ஆழ்ந்த சிந்தனையிலோ, நீண்ட பெருமூச்சிலோ, நெஞ்சின் தழுதழுப்பிலோ, கன்னத்தில் துளித்த ஒரு கண்முத்திலோ, கனம் தழைந்த புன்னகையிலோ- அவள்தான் அப்படித் தோன்றித் தெரிகிறாள்.

லா. ச. ராமாமிருதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/5&oldid=1026735" இலிருந்து மீள்விக்கப்பட்டது