பக்கம்:அஞ்சலி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 லா. ச. ராமாமிருதம்


யல்லே? என்னைப் பாருங்கோ, சற்றே திரும்பிப்பாருங்கோ! நான் தரங்கிணி! மா—ஆ—ஆயே! ஸ்காயே! அம்மா, தாகமாயிருக்கே!—”

***

“இல்லை; நான் சொன்னதை வேணும்னா மறந்துடுங்கோ. சத்யம்னு சொன்னால் மாத்திரம் உங்களை என்னால் கட்டிவிட முடியுமா, என்ன? நான் உங்களை விடுவிச்சுட்டேன். இனிமேல் நீங்கள் உங்களை விடுவிச்சுக்கோங்கோ. உங்கள் இஷ்டம் இனிமேல். இனிமேல் இதைப் பற்றி நான் பேசப்போறதில்லை. சத்தியமாப் பேசப் போறதில்லே. ஆனால் ஒண்னு மாத்திரம்...” அந்த ‘ஒண்’ணைப் பிடித்துவிடுவாள் போலும் அவள் உள்ளங்கை கிண்ணம்போல் குழிந்தது.

“இதோ பாரம்மா, உங்கள் புருஷன் வந்திருக்கிறார். உங்களுக்கு ஏதோ கொண்டு வந்திருக்கிறார்.”

“ஆ? யாரு? எனக்கு தூக்கம் வரது—”

“தரங்கிணி, இந்தா! வாயைத் திற. ஆ! அப்படி! என்ன, அடையாளம் தெரியறதோ! இதைக் குடித்து விட்டுத் தூங்கு.”

“என்னது, தீர்மானம்?”

“எந்த ஜலம், அடையாளம் தெரிகிறதா? தரங்கிணீ! தரங்கிணீ!”

அவள் பதில் பேசவில்லை. மார்மேல் போர்வை லேசாய் மிதக்க ஆரம்பித்துவிட்டது. டாக்டர் குனிந்து அவளை உற்று நோக்கினார். அவர் நிமிருகையில் முகம் ஒளி வீசிற்று.

“துாங்குகிறாள். வெளியே வாங்கோ. It is good—நீங்கள் என்ன பண்ணினீர்கள்? What? வெறும் water? Amazing! Amazing!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/50&oldid=1033402" இலிருந்து மீள்விக்கப்பட்டது