பக்கம்:அஞ்சலி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 லா. ச. ராமாமிருதம்

கிணற்றுக் கைப்பிடிச் சுவரின்மேல் தொங்கிய தாம்புக் கயிறின்மீது ஊரும் வண்டின்மேல் நிலைத்த பார்வையுடன் தரங்கிணி கொல்லைப்புறக் குறட்டில் தூண்மேல் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். பக்கத்தாத்து மாமி பக்கத்தில் பருப்பு நோன்பிக் கொண்டிருந்தாள்.

“தரங்கிணி!”

“ஏய், ஏடி!”

அப்புறம் அவளுக்குப் பொறுக்க முடியவில்லை. எழுந்து பக்கத்தில் போய் அவள் முகத்தின் எதிரில் விரலைச் சுண்டினாள்.

“உம்—என்ன மாமி?” தரங்கிணி திடுக்கென லிழித்துக் கொண்டாள்.

“மூச்சு இருக்கா இல்லையான்னு பார்த்தேன்.”

இருவருக்கும் சேர்ந்தாற்போல் சிரிப்பு வந்துவிட்டது.

“நீ என்ன யோசனையில் இருக்கேன்னு எனக்குத் தெரியும்!”

தரங்கிணியின் கண்களில் வினாவெழுந்தது.

“ஒரு மாதமா தபால்காரன் உன் வீட்டு வாசற்படியேறாமல் தாண்டிண்டு போறான்னுதானே!”

“ஆமாம்; நீங்கள் இன்னும் கேலி பண்ணிண்டிருங்கோ. நாங்கள் ரெண்டுபேரும் நேத்திக்குத்தான் மாலை மாத்திண்டோமோன்னோ?”

மாமி மறுபடியும் நோன்ப ஆரம்பித்தாள். “இதுக்கெல்லாம் நேத்திக்கு இன்னிக்குன்னு உண்டாடி? நேத்தி மாதிரிதான் இன்னிக்கு. இன்னிமாதிரிதான் நாளைக்கும். எனக்கு எவ்வளவோ விஷயங்கள் நேத்து மாதிரிதான் இருக்கு. இன்னிக் காத்தாலே மொதக்கொண்டு முக்கு வீட்டிலே அமர்க்களப் படறதே, என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/56&oldid=1023436" இலிருந்து மீள்விக்கப்பட்டது