பக்கம்:அஞ்சலி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி 47

தெரியுமோன்னோ? ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே நடந்த சமாசாரம் இன்னிக்குத் தொடர்ந்துண்டிருக்கு.”

“என்னவாம்?”

“நீ இல்லை அப்போது. இங்கே தருமாம்பா இருக்கா பாரு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே திடீர்னு அவளுடைய கழுத்துச் சங்கிலியைக் காணோம். எங்கே தொலைச்சுட்டதோ, தெரியல்லே. அவள் ஆம்படையான் எவ்வளவு மூர்க்கன்னு ஊர் தெரிஞ்ச விஷயம். நெய் முட்டையைக் காக்கா கொத்திண்டு போச்சுன்னா, எந்தக் காக்கா கொத்திண்டு போச்சு, ஊரிலேருக்கற காக்காயெல்லாம் என்னெதிரே கொண்டுவந்து நிறுத்து என்பான். அதுவும் கழுத்துச் சங்கிலியைக் காணோம்னா, உசிரோட கொன்னுப்பிடுவான். தொலைச்சுப்பிடுவான் வெச்சுக்கோ. அவன் மூர்க்கம் எவ்வளவு ப்ரசித்தமோ, அவ்வளவு ப்ரசித்தம் தருமியின் அசடும். ஜோடி எவ்வளவு ஆகையா மாட்டிண்டி ருக்கு, பார்!

“தருமி ‘டக்’ குன்னு வேலைக்காரக் குட்டி மேலே பழி வைச்சுட்டாள். எண்ணெய்ப் பிசுக்கெடுக்க, சோப்புத்தண்ணீரில் டப்பாவில் ஊறப்போட்டு வெச்சிருந்தேன். கிணத்தடியிலே இருந்தது. அடுப்புச் சாதத்தை கிளறிட்டு வரத்துக்குள்ளே காணோம்’னு ஒரேயடியா சாதிக்கறன. என்ன பண்றது? நாங்களும் அப்போ அவளை நம்பினோம்னுதான் வெச்சுக்கோ. அசடுகளுக்கெல்லாம் ஒரு தனிச் சமத்து உண்டு, தெரியுமோன்னோ? நிஜமோ, பொய்யோ பிறத்தியார் தங்களை நம்புபம்டி, கடைசி வரையில் சொன்னதையே சொல்லிண்டிருக்கும். அந்தப் பெண் மானி. நல்லபடி வாழ்ந்து நசிச்சுப்போன குடும்பம் போலிருக்கு. இங்கே வேறே திட்டி மிரட்டியிருக்கா. வீட்டுக்குப் போனால் அங்கேயும் ஆம்படையான் மானம் போச்சேன்னு—அவள் திருடின்னு நினைச்சுண்டு—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/57&oldid=1023447" இலிருந்து மீள்விக்கப்பட்டது