பக்கம்:அஞ்சலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தரங்கிணி 49

தரங்கிணி திகைப்புடன் தன் குமட்டலின் விளைவை பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் நெற்றியில் வேர்வை துளித்து நின்றது; மாமி பக்கத்தில் வந்து கையைப் பிடித்தாள். திடீரென்று மாமி முகத்தில் மேகங்கள் விலகி சிரிப்பின் ஒளி முகம் முழுவதும் சிதறிற்று. தரங்கிணியின் முகத்தை இருகைகளாலும் வழித்து நெற்றியில் நெறித்துக் கொண்டாள். சொடக்குகள் ‘சொடசொட’வென உதிர்ந்தன. அவசர அவசரமாய் சமையலறைக்குள் நுழைந்து சர்க்கரை டப்பாவை எடுத்துவந்து தரங்கிணியின் கையில் கொடுத்துத் தன் கையை நீட்டினாள். அவள் முகத்தில் குறும்பு மிளிர்ந்தது.

அவள் செய்கைகள் மண்டைக்குள் தோய்கையில் தரங்கிணியின் கண்கள் அகல விரிந்தன. தேகமாத்யந்தம் ‘விர்’ரென்றது. அவளுள் நேர்ந்த உள் உதயத்தின் தகதகப்பில் அவள் கண்கள் தாழ்ந்து, உள்ளுக்கிழுத்த திரிபோல் வெளிப் பார்வை மங்கியது. தூக்கத்தில் நடப்பவளாய் விட்டாள். மாமியின் பக்கமிருந்து திரும்பிய கால்கள் மெதுவாய்க் குறட்டைக் கடந்து, கொல்லை ரேழியைக் கடந்து—

“தரங்கிணி!”

முற்றத்தைக் கடந்து—

“எங்கேடி போறே? ஏடி தரங்கிணி!”

முற்றத்திற்கு அப்பால் அகன்ற தாழ்வாரத்தைக் கடந்து—

“சரிம்மா; நான் இப்படியே ஆத்துக்குப் போறேன் கொல்லைக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ.”

அவளுக்குக் காது கேட்கவில்லை. அவள் தன் வசத்திவில்லை. அவள் கால்கள் அவளை வாசல் அறைக்குள் தாங்கிச் சென்று மேஜைக்கெதிரே நாற்காலியில்

அ.--4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/59&oldid=1024031" இலிருந்து மீள்விக்கப்பட்டது