பக்கம்:அஞ்சலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60 லா. ச. ராமாமிருதம்

“ஏது, இன்றைக்குக் குழந்தைகளுக்கு அப்பாமேல் இவ்வளவு பிரியம்!”

“எல்லாம் காரணமாத்தான்—”

மாஞ்சி சிரித்திக்கோண்டே, கையில் தட்டுடன் சமையலறையிலிருந்து வந்தாள். அவளுக்கு மேல்மூச்சு வாங்கிற்று. நான்கு மாதங்களுக்கு முன்னிருந்ததைவிட, இடுப்பு இப்பொழுது நன்கு அகன்றிருந்தது.

“இந்தாங்கோ இன்னி டிபன்!”

கழற்றிக்கொண்டிருக்கும் சொக்காய்க்குள்ளிருந்து அவன் குரல் ‘என்னது?’ என்றது.

“கடலையுருண்டை. இன்னிக்கென்னவோ வாய்க்கு இது வேணும் போலிருந்தது.”

“கோலிக் கணக்கில் ஒரே அச்சில் இப்படி உருட்டுவதற்கு எவ்வளவு சாமர்த்தியம் வேணும்!”

“ஆமாம், குழந்தைகளுக்கு இதுக்குமேலே கொடுத்தால் உடம்புக்காகுமா? இல்லை, பெரிசாயிருக்கேன்னு புட்டுக் கொடுத்தா வாங்கிக்குமா நம்ம குட்டிகள்? என்ன அப்படிப் பார்த்துண்டே நிக்கறேள்?”

அவள் குரல் அவன் காதில் விழவில்லை. அவன் ‘அக்கா'வைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். பெரிது பண்ணிய புகைப்படத்திலிருந்து அக்கா சிரித்துக் கொண்டிருந்தாள். மாஞ்சி இந்த வீட்டில் புகுந்த நாளிலிருந்து அந்தப் பார்வை, கூடத்திலிருந்தே அவள் நடமாட்டங்களையும் செய்கைகளையும் ஊன்றிக் கவனிப்பதுபோல் அவளுக்குத் தோன்றும். பெரிய அழகில்லை. ஆனால் முகத்தில் நல்ல களை. பீறிடும் சிரிப்பை இழுத்துக் கட்டிய புன்னகையில், முக முழுதும் உள்ளொளி விட்டுப் பிரகாசிதத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/70&oldid=1033412" இலிருந்து மீள்விக்கப்பட்டது