பக்கம்:அஞ்சலி.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 71

எப்படி அவள் அப்படி லேசாய் போனாள், குழந்தை மாதிரி!

என் மெளனமான வியப்பைப் புரிந்துகொண்டு புன்னகை புரிவாள்.

“பார்த்தையா! அன்னிக்கே சொன்னேனே ஒருநாள், ஞாபகமிருக்கா?”

“என்ன லக்ஷ்மி?”

“ஒண்ணுமில்லை” நினைவு மறுபடியும் எங்கோ சுற்ற ஆரம்பித்துவிடும்.

“இல்லேடா அம்பீ! செளகரியமாயில்லே! என்னை மறுபடியும் படுக்கையில் போட்டுவிடு. அப்பான்னு கூப்பிட்றேனே! அம்பீ,எனக்காக நீ கண் முழிச்சுண்டாயிருக்கே?.அம்பீ தூங்குடா, தூங்கு.உனக்கு உடம்புக்காகாது. எனக்கு இப்பிடித்தானிருக்கும்.இன்னம் கொஞ்சநாள்தான் கொஞ்சநாள்தான்...”

ஜூரம் வந்து முப்பத்திரண்டாம் நாள்—அன்று வெள்ளிக்கிழமை விடியற்காலை. லட்சுமி தூங்கிக்கொண்டிருந்தாள் அல்லது கண்கள் மூடியிருந்தன. உடம்பை அம்மா தொட்டுப் பார்த்தாள். அவள் முகம் மலர்ந்தது.

“அம்பீ ஜூரம் விட்டுடுத்து!”

லட்சுமி கண்களைத் திறவாமல் புன்னகை புரிந்து கொண்டு எதையோ தேடுவதுபோல் கைகளை நீட்டினாள்.

“அம்ம்ழீ! அம்ம்ழீ!!”

லட்சுமிக்கு நாக்கு இழுத்துவிட்டது. ஒரே ஒரு தடவை மங்கிக்கொண்டிருக்கும் முழுச் சக்தியுடன் கண்களை விழித்து என்னைப் பார்த்து என் கழுத்தைக் கட்டித் தன் பக்கமாய் இழுத்துக்கொண்டாள். அவ்வளவுதான் அப்புறம் நினைவு தப்பிவிட்டது. நெஞ்சு கடைய ஆரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/81&oldid=1024214" இருந்து மீள்விக்கப்பட்டது