பக்கம்:அஞ்சலி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 85

“சந்தோஷத்தைச் சொல்லுங்கோ. நீங்களும் அந்த நீனாவுக்கு அப்பா என்கிறதை உங்களுக்கு நான் ஞாபகப் படுத்தறேன்.”

“அவர்கள் இருவருக்குமிடையில் குறுக்கே நிற்க நீ யார், நான் யார்?”

“அதான் நீங்கள் தவறே பண்ணமாட்டேளே!” என்று மாஞ்சி ஏளனம் பண்ணினாள்.

ஜமதக்னி விளக்குச் சுடரையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தான். அவன் புருவங்கள், தீர்க்கமான மனோலயத்தில் நெற்றி நடுவில் சந்தித்தன.

“என்னெதிரில் இப்பொழுது இன்னொரு காட்சியைப் பார்க்கிறேன். ஒரு சின்னப்பயல், எட்டு வயசுப் பயல், துடிப்பயல், நான் எதிரில் இல்லாத வேளையில் பெற்றவள் இல்லாத செல்லமெல்லாம், சொல்லச்சொல்லக் கொடுத்துக் கெடுத்த பயல் எதற்கோ தன்னைக் கண்டித்த தாயைக் கன்னத்தில் ஓங்கி அறைகிறான்—”

மாஞ்சி அந்த நிமிஷந் தான் அடிபட்டாற்போல் கன்னங்களைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். அவன் குரலின் சொடுக்கு “சுரீல்” என்றது. ஒரு குரலுக்கு இவ்வளவு மகிமையா என்ன! இத்தனை வருஷங்கள் கழித்தும், எப்படி அந்தக் காட்சியை உள் கண்ணெதிரில் இவரால் அந்தத் தீர்க்கத்துடன் கொண்டுவர முடிகிறது?

“நான் நல்ல வேளையாக அகஸ்மாத்தாய் அந்த இடத்தில் வந்தேனோ, கண்கூடாய்ப் பார்க்க முடிந்தது. இல்லாவிடில் நீ அவனுக்காக மறைத்த எத்தனையோ குற்றங்களுடன் இதையும் மறைத்திருப்பாயல்லவா? நானும் வந்தேன், அவனும் பிழைத்தான்.”

“போறுமே இப்போ நினைச்சுண்டாக்கூட வயிறு கொதிக்கறது, அவனை வெடுக்குனு என்கிட்டேருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/95&oldid=1024383" இலிருந்து மீள்விக்கப்பட்டது