பக்கம்:அஞ்சலி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 89

“ஏன் பெண்ணைப் பெற்ற எந்தத் தாயாரின் நியாயமும் தனி நியாயமாயிருக்கிறது? மீனா என் பெண் என்று நினைக்கவே எனக்கு வெட்கமாயிருக்கிறது.”

“உள்ளே விடமாட்டேன்னு நெருப்பா நின்னேளே, நம் பெண் அப்படியே இங்கேயும் அடைக்கலத்துக்கு ஒத்தருமில்லேன்னு எங்கேயாவாது குளத்திலே குட்டையிலே விழுந்திருந்தால் என்ன செய்யறது?”

“என்ன செய்வது? என் பெண் போய்விட்டாளே இவ்வளவு அசட்டுத்தனத்துடன் என்று அழுவேன். ஆனால் நம் மானம்—அவளுடையதும்தான்—அவள் சாவோடு பிழைத்ததே என்று சந்தோஷப்படுவேன். ஆனால், நல்ல வேளையாய் மீனா அவ்வளவு பெரிய அசடு இல்லை. இங்கே அவளுக்கு செவிசாய்ப்பார் யாருமில்லை என்று கண்டுகொண்டாள். மரியாதையாய்த் தன்னி டத்துக்கே போய்ச் சேர்ந்துவிட்டாள். அதுதான் சரி. நல்ல வேளையாக அவள் வீட்டார் அவளை ஏற்றுக் கொண்டார்களே அதைச் சொல்லு! மீனாவுக்கு சாக நிஜமாவே எண்ணமிருந்தால் அவள் வீட்டுப் புழக்கடையிலேயே பெரிய கிணறு இருக்கிறது. இது வரையில் அவள் அதில் மிதப்பதாய்த் தகவல் இல்லை. வீட்டுக்கு உள்ளேயே தான் சந்தோஷமாய் வளைய வருகிறாள் என்று கேள்வி. கையில் வேறு ஒன்று ஏந்திக்கொண்டிருக்கிறாள்—”

“நான் இன்னும் என் பேரனைக் கண்ணால்கூடக் காணவில்லை—” மாஞ்சி மூக்கை உறிஞ்சினாள்.

அவன் மறுபடியும் மெதுவாக அவளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.

“நான் இப்போது காட்சியை மாற்றப்போகிறேன். இது உனக்குப் பிடித்த காட்சி.

“எது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/99&oldid=1033436" இலிருந்து மீள்விக்கப்பட்டது