பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பணிக்குக்கிண்ணத்தில் பளபளக்கும் சிவந்த மதுவை மட்டும் தானா அவன் உரிஞ்சுகின்றான்?

இல்லை. ஆயிரமாயிரம் உழைப்போரின் உடல் ரத்தத்தையும் உரிஞ்சுகிற அட்டை அவன்.

முத்துப்பல் காட்டி முறுவலித்து மோகம் கொழுத்த ஒயிலாக நீட்டி நெளிகின்ற அந்த சர சங்கியின் காதிகளிலே டாலடிக்கிற லோலக்கின் சிவப்புகள் ....

நம்மைப் போன்ற தொழிலாளிகள் சிந்திய ரத்தக் கண்ணீர்த் துளிகள் என்பதை அவள் அறிய மாட்டாள்.

சங்கு போன்ற அவளது கழுத்தின் அழகுக்கு அழகு செய்யும் முத்துமாலை, தங்கச் சங்கிலி ....

நம் போன்ற உழைப்போரின் இதய நரம்புகள், ரத்த நாளங்கள் அவை என்பதை அவள் உணரமாட்டாள். உணர மூளையும் கிடையாது.

பட்டுப் போன்ற அவள் சருமத்தைப் போர்த்திக்கிடக்கின்ற ஆடைகள், நவயுக டிசைன்களில் வெட்டித் தைத்த காகரிக டிரெஸ்கள் -

எல்லாம் நம் போன்ற உழைப்பாளிகளின் ரத்தம்...ரத்தம்...ரத்தமேயாகும்.

அதை அவன் உணரமாட்டான்.

இதோ இங்கே கவனியுங்கள்.