பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

சுப் பழமும் இருக்கிறது. உரித்துக் கொடுக்க வேலையாளும் அருகே நிற்கிறான். காப்பியை ருசித்த சீமான் சீறுகிறார், அதற்குச் சீனியில்லை என்று,

'மூவர் கவலையும் ஒரே ரகமானது தானா? அப்படிச் சொல்வது புத்திசாலித்தனம் தானா?என்று கேட்கிறேன்.

கஞ்சிக்கு உப்பு இல்லை யென்பாருக்கும் பாலுக்குச் சர்க்கரையில்லை யென்பாருக்கும் கவலை யொன்றே எனக் கயவன் ஒருவன் கூறினான். மனிதத்தன்மையற்ற பேச்சு ஆகும், இன்று அப்படிச் சொன்னால்,

இந்நிலையிலே, பருக்கையற்றவன் வயிறெரியாமல் வாழ்வது எப்படி சாத்தியம்? கஞ்சி குடிப்பவன் காலைக் காப்பியும், மாலையிலே கொக்கோவும், இரவில் ஒவலும் பருகுகிற சோம்பேறிக் கனவான் நிலைக்கண்டு பெருமூச்சு எறியாமல் வாழ்வது எவ்விதம் இயலும்.

"ஆசைப்படாதே! அடக்கு உன் ஆசையை' என்று ஒடுக்கிவிட்டு, நூறை ஆயிரமாகவும். ஆயிரங்களை லட்சமாகவும், மேலும் மேலும் அதிகமாகும்படியும் பெருகச் செய்ய திட்டங்களிட்டுத் திண்டிலே சாய்ந்து கனவுகள் காண்கின்ற ஒரு சிலரின் மண்டையிலடிக்க வேண்டியது அல்லவா மனிதப் பண்பு.

கொள்ளைக்காரர்களையும் கொலைகாரர்களையும் அடக்க, அழிக்க விரும்புகிற நியாயம், சமூக அமைப்பு முறை எல்லாம் உண்மையான நீதியை