பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

யும் உயர்ந்த சமுதாய முறையையும், உலகிலே காட்டவேண்டுமானால், உயிர்க்குலத்தின் பெரும் பாலோரைச் சுரண்டி உயிர்வாழ்வோரை தடை பிணங்களாக்குகின்ற பணமூட்டைகள் ஒருசிலருக்குச் சீட்டுக்கிழிக்க வேண்டியது தான் சரியான செயலாகும்.

இன்றையப் பொருளாதார அமைப்பு முறை வெறும் ஹம்பக். மனிதரை மனிதர் ஏய்க்கின்ற எத்து வியாபாரம், வஞ்சிக்கின்ற துரோகம் மட்டுமல்ல. மனித சமுதாய நலனுக்கு, வளர்ச்சிக்கு, ஊறுசெய்கிற பண்பும் ஆகும்.

பொருளாதாரம் சரியானபடி பகுத்து அமைக்கப்படாததனால், மனித சமுதாயத்திலே தாண்டவமாடுகிற கேடுகள் மிகப்பல. ஏழ்மை என்பது பாபம், தரித்திரமாகயிருப்பது மகத்தான குற்றம்; ஏழை எளியவர்கள் தரித்திங்கள் பெருவியாதிக்காரர்களைப்போல வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று சமுதாயத்தின் மேல் அந்தஸ்திலே உள்ளவர்கள் நம்புகிறார்கள். அவர்களைத் தாழ்ந்தவர்களாக்கி ஒதுக்கிவிட்டதனால், பணம் இல்லாதவர்கள் மனிதர்கள் என்ற தன்மையை மறந்து, வசதிகளை இழந்து, கண்டபடி வாழ்கிறார்கள். அசுத்தமும், போதிய உணவு இன்மையும், நாகரிக முறைகளை, அறிவு வளர்ச்சி விவரங்களை அறிந்து கொள்ள அசதியின்மையும் - எல்லாமாகச் சேர்ந்து அவர்களே மனித ஜக்துக்களாக, வியாதி பற்றிய அருவருப்பு காட்டப்பட வேண்டியவர்களாக மாற்றி விடுகின்றன

அவர்கள் உழைக்கிறார்கள், உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை.