பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

டிலே. நிலாவுக்காகக் காத்திருந்து, நிலவொளியிலே சாப்பிடுவதும், தானியங்களில் கல் பொறுக்குவது, சலித்தெடுப்பது முதலிய வேலைகளை முடித்து கொள்கின்ற 'இல்லாத' குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன கிராமங்களிலே.

இது மின்சார யுகம் தான். யார் இல்லை என்றது. ஆனால் அந்த மின்சாரம், ஒளி கம்பிப்பல்லிலே கிறுக்குச் சிரிப்பு சிதறச் செய்கின்ற - சந்திரன் குஞ்சுகள் போன்ற விளக்குள் எல்லாம் யாருக்கு அதிகம் பயன்படுகின்றன?

பொருள் உள்ள சோம்பேறிகளின் உல்லாச பவனங்களையும், கேளிக்கை மண்டபங்களையும் ஒளியுறுத்துவதற்காக நிழலிலே ஆடவிட்டு பணம் பிடுங்கி தங்கள் பைகளை நிரப்பும் பிஸினஸை, கலையின் பெயரால் சிறப்புற வளர்க்கிற பணமூட்டைகளுக்கு பக்கபலமாக! இந்த ரீதியிலே வாழ்ந்து- சகல வழிகளிலும் பணம்பிடுங்குகிற படாடோபிக்காரர்களுக்கு சேவகனாய் உதவுகிறது - அறிவுலக ஆராய்ச்சி.

உலகிற்கு - உயிர்க்குலம் முழுமைக்கும் - அவை பயன்பெற முடியும், தெருவிளக்குகள் போல அவை பொதுவுடமையிலே செயலாற்றப்படின்.

அந்நிலை வரும் வரை, ஒரு சிலருக்கே-இல்லாதவர்களை சுரண்டுகிற உடையவர்களுக்கே உபயோகப்படும்.

இருளை ஓட்ட எலெக்ட்ரிக் லைட்டும், கீத ஒலியலைகளைப் பரப்ப ரேடியோவும் கிராமபோன்களும் இருப்பதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?