பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

அலுவல்களை கவனிக்கவே நேரமில்லாது. அவகாசமற்று, உழைத்து அலுக்கிறபோது, நோய்கொடிகள் வராது காப்பது எங்கே!

உழைப்பினால் வரும் பணம் அன்றாடச் செலவுக்கே சரிக்கட்டி வராத போது, சாதாரணச் சாப்பாடு, உடை முதலியவற்றுக்கே கட்டிவராத போது சத்தான உணவுகளுக்கும், டானிக்குகளுக்கும், வியாதிவந்தால், மருந்துகளுக்கும். டாக்டர் பில்லுக்கும் கொட்டி அழப்படுவதற்கு ஈடாவதேது!

எவரது பெட்டிகள் நிரம்புவதற்காக உழைத்தார்களோ, எவர் ஆடம்பர வாழ்க்கைக்காக தங்கள் உடலை ஓடாகத் தேய்த்தார்களோ, யாருக்காக தங்கள் முழு நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்து நம்பிக்கையாய், நாணயமாய் நடந்தார்களோ அவர்களிடம் போய் பல்லெலாம் தெரியக்காட்டினாலும் பணம் வராது. ஒரு சில நல்லவர்கள் இரக்கப்பட்டு கொடுக்கலாம், ஒரு சிலர் கடனாகத் தரலாம், என்றாலும் ஒன்றிரண்டு தடவைகளுக்கு மேல் உதவி கிட்டாது.

பெரும்பாலும், முதலாளிகளிடமிருந்து தொழிலாளிகள் நேர்மையான, உரிய, பெருத்த சன்மானங்களை எதிர்பார்க்கக்கூடாது. வியாதியுற்ற காலத்திலே கூட அவ்வித உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற வேண்டியது தான்.

ஒரு கடைமுதலாளி. அவரிடம் நல்ல பெயர் பெற்ற, நாணயமான, யோக்கியமுள்ள உழைப்பாளி - கடைக்கணக்கர். வசதிகளில்லை. ஒய்வு இல்லை. உழைப்பு அதிகம். அப்படிப் பல வருஷங்கள்