பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29


மில்லை. உழைப்புக்குப் பலனாக வருகின்ற சிறு கூலியிலே மிச்சம் இருக்க இடமுமில்லை, அதனாலே அவர்கள் வாழ வழியில்லே!

அதே வேளையிலே, பணம் கொழுத்தவர்கள் வீடுகளிலே நடக்கும் கோலாகலங்களைப் பாருங்கள்! பணத்தின் மிடுக்கான நடனம் என்னென்ன செய்யத் தூண்டுகிறது என்று கவனியுங்கள்!

அதோ அந்த மாமிசபிண்டம் - பகட்டான பட்டுப்புடவை கட்டியிருப்பதால், கண்பறிக்கும் வைரங்கள் அணிந்திருப்பதால் பெண் என்று தோன்றுகிறது கண் சிமிட்டுகிறது. பிரமாத தலைவலி வந்துவிட்டது போல் நடிக்கிறது,

அதனால், முதலாளி ஐயாவின் செயல்களிலே பரபரப்பு டெலிபோன் மணியின் ஙண ஙணப்பு. டாக்டர் ஸாரின் பிளஷர் பறக்க நேரிடுகிறது. டாக்டர் வருகிறார், போகிறார். அவரது பையிலே பணம் விழுகிறது.

ஒரு அரண்மனை'யிலே சமூகம் அவர்களுக்கு: சீக்கு, ஏதோ உடல் கொஞ்சம் சுட்டது.சிறு காய்ச்சல், (ஜூரம்) தொழிலாளிக்கு அதுபோல் ஏற்பட்டால், அலட்சியம் செய்துவிட்டு உத்தியோகத்துக்குப் போயிருப்பான். இல்லையெனில், அன்றைய சம்பளத்திலே மண் தான் ஆனால், முதலாளி ஐயா.என்றால்.....அவருக்கு அவரே ராஜா கட்டிலில் படுத்தார், மேலே போர்வை புரண்டது. என்ன, என்ன என்று கேட்டு உபசரணை பண்ண ஆட்கள்.டாக்டர் மருந்துப் புட்டிகள். பழங்கள் - இன்னும் எவ்வளவோ!