பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

உழைப்போர் உயர, அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெற, தங்களைத் தங்களே உணர்ந்து வாழ்க்கை வசதிகளை அடைவதற்காக, அவர்களின் அறிவு வளர வேண்டியது அவசியம்.

ஆனால், இன்று மக்களுக்கு அறிவுபுகட்டும் சாதனங்கள் எல்லாம் மக்களை மடையர்களாக வைத்துத் தாம் வாழவேண்டும் என எண்ணுவோர் ஆதிக்கத்திலேயே உள்ளன. வேண்டிய அவகாசமும் அவர்களிடமே இருக்கின்றன. ஏராளமான பணம் இருப்பதனால்.

உழைப்பவர்கள் தங்கள் அன்றாடத்தேவைகளுக்கு உரிய பொருள் பெறவே. நாள் முழுதும் கூலிக்கு உழைக்க வேண்டியதாகிறது. கிடைக்கின்ற காசும் கொஞ்சமே. உழைப்பின் அலுப்பைத் தீர்க்கவே ஓய்வு போதவில்லை என்ற நிலைபோக, அறிவுப் பசியைத் தணிக்க உதவும் விருந்துகளுக்கோ, கொள்ளை கொள்ளையாகத் தான் கொட்டியழ வேண்டியிருக்கிறது.

மலிவாக கிடைக்க வழி செய்கிறார்கள் முதலாளி என்றால், அவை தங்கள் பணப் பெருக்கத்தைக் கருதி மக்களின் கீழ்த்த உணர்ச்சிகளைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கும் கோக்கமுடையனவாகத் தான்

இன்றைய சினிமாக்களை கவனியுங்கள். பொது ஜனத்துக்கு இது தான் பிடிக்கும், இவை தான் புரியும்; மக்கள் இவை தவிர வேறு எதையும் விரும்பமாட்டார்கள் என்று சொல்லி குப்பைப் படங்களையே தயாரித்துக் கொட்டுகிறார்கள். காலத்துக்கேற்ற கருத்துக்களையோ,கதைகளையோ படமாக்குவதில்லை.