பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38

ஏன்? பணம் படைத்தோர் வியாபார நோக்கிலே படவுலகில் திரிவதால்,

பத்திரிகைகள் எல்லாம் ஒரே கட்சியின் எண்ணங்களேப் பரப்புகிற பிரசார நோட்டிஸ்களாக இருக்கின்றன. ஒரே முதலாளி பல பத்திரிகைகள் நடத்தத் துடிக்கிறார்.வியாபார வெற்றிபெறத் தவிப்பு இருக்கிறதே தவிர, எதையாவது அச்சிட்டு பகட்டான அட்டை போட்டு, அனுப்பிவிட்டால் விற்று விடும் என்கிற பிஸினஸ் முறையில் செயல்புரிய அரும்பாடுபடுகிறார்களே தவிர மக்களின் அறிவை அபிவிருத்தி செய்ய உழைக்கவில்லை.

அறிவின் களஞ்சியங்களான புத்தகங்களே வெளியிட விரும்புவதில்லை. எது சுலபமாக விற்பனையாகுமோ, எந்தக் கருத்துக்கு எக்காலத்தில் மதிப்பு இருக்குமோ, அந்தச்சமயத்திலே அவற்றைப் புத்தகங்களாக்கி சாதாரன வாசகன் பணம் கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு விலைய உயர்த்தி வைத்துக் கொள்ளையடிக்க ஆசைப்படுகிறார்கள். மலிவுப்பிரசுரங்கள் போட மனம் இல்லை. அறிவு நூல்களை மலிவாகப் பிரசுரிக்க விரும்புவோரை ஒடுக்கிவிட, பெரும் பணக்காரர்கன் ஒன்றுபட்டு கூட்டுக்கொள்ளை லாபத் திட்டம் தயாரிக்க வேண்டும் என்று தவிக்கிறார்கள், எல்லாம் பணத்தோடு பணம் சேர்க்கும் முயற்சி தான்! -

கல்வியும் ஆராய்ச்சிப் படிப்பும் பெற பணக்கார வீட்டுப் பையன்களுக்கே வசதிகள் இருக்கின்றன. பணமும் ஓய்வும் அவர்களுக்குத் தான் உள்ளன. உழைப்பவர்களின் குழந்தைகள் ஆரம்பப் பாடங்கள் கற்கக்கூட பள்ளிக்கூடம் போக இயலாத நிலையே நீடிக்கிறது. படிக்க வைப்பதைவிட பையனை ஏதாவது 'சிற்றாள் வேலை’க்கு அனுப்பினால் ஏதோ