பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


40

வொரு மனிதனுள்ளும் தூங்குகிற அறிவுப்பொறியை ஒளியுறுத்தும் சுடராக அறிஞர்களின் சிக்தனை பயன்படுமானால், திக்கெட்டும் தீ பரவும். அறிவுத் தீ சிக்தனைச் செந் நாக்குகள் நீட்டி சமுதாயத்தின் இழிநிலையைச் சுட்டெரிக்கும் திட்டம் காண வழி காட்டும்.

தங்கள் குறைகளை உணர ஒளிகாட்டும். தவறுகளை நீக்கி நிறைவுகள் பெற, வஞ்சிக்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் பெற வகைகாட்டும்,

அறிவுத் தீ எங்கும் பரவவேண்டும். அந்தகாரம் ஒழிய வேண்டும். *

அறிவு அந்தகாரத்திலே ஆட்சிபுரிய விரும்புகிற கரும்பூதங்களுக்குச் சாவுமனி அடிக்க வேண்டும். மக்களின் உழைப்பை ஏற்றுக்கொண்டு, வாழ வசதிகள் கொடுக்க விரும்பாத பணமூட்டைகளுக்கு ஜமீன்தார்களுக்கு, சமஸ்தானபதிகளுக்கு, ஆளும் ஆசைபற்றிய எல்லோருக்குமே சாவுமணி அடித்தாக வேண்டும். அறியாமையை வளர்க்கிற போலித்தனமான கலைஞர்கள், அறிஞர்கள், சக்தர்ப்பவாதிகள், மதவாதிகள் எல்லோருக்குமே சாவுமணி அடித்தாக வேண்டும்.

அந்தச் சுயநலவாதிகளுக்கும், பிற்போக்குக் கும் பல்களுக்கும் அறிவு அந்தகாரம், சமூக மடைமைகள், பொருளாதார பேதங்கள் அனைத்துக்கும் அடிக்கப்படுகிற சாவுமணி தான் புதுயுக உதயத்தை வரவேற்க ஆர்க்கின்ற மங்கள மணியொலியாகும்.

அது ஒலிக்கப் போவது என்று? எப்போது?