பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 இலக்கிய வளர்ச்சியிலும், சமுதாய முன்னேற்றத்திலும் தீவிரப் பற்று கோண்டவர். "கவலையற்ற நாடோடி என்று தன்னைத்தானே அறிமுகம் செய்து கொள்வதில் மகிழ்வு கொள்பவர். புதுயுக இலக்கியத்திலே சிந்தனை, எழுத்து வலிமை, சொல்லாட்சி, உணர்ச்சிப் பிரதிபலிப்பு முதலியவற்றால் தனியான ஸ்தானம் வகுத்துக்கொண்ட ஆசிரியர்.

அவரது எழுத்தின் சிறப்பை, எண்ணங்களின் கொதி நிலையை, கருத்துக்களின் உயர்வை உணர்ச்சி கரமாக விளக்குகிறது ’அடியுங்கள் சாவுமணி’

தீவிரமான சிந்தனைச் சிருஷ்டிகளை அழகான புத்தகங்களாக்கி, புதுயுக இலக்கிய வரிசையில் முக்கிய இடம் பெற்றுவிட்ட சாந்தி நிலையம் மகிழ்வுடனும் பெருமையுடனும் மிவாஸ்கியின் நூலை தமிழகத்துக்கு சமர்ப்பிக்கிறது.

சாந்தி நிலையம் துறையூர்

:

வல்விக்கண்ணன்