பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அடியுங்கள் சாவுமணி

1

"புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்” என்ற உறுதியுடன், உழைப்போர் போர் புரிகின்ற இந்தக் காலத்திலே... ..

புதுயுக உதயத்தின் பொன்கீற்று உலகவெளியிலே வைள்ளிபல் நாட்டில் சிரிக்கிறது என்று பிரமாதப்படுத்துகிற இந்த நாளிலும் கூட......

சுதந்திரத்தின் ஆசார வாசலிலே நாம் நிற்கிறோம் என்று தேசபக்தர்கள் பூரித்துப்போகிற இந்த வேளையிலும் கூட..... . - ஒரே உலகம் என்று கனவுகண்டு, எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஒர் நிறை என்று பிரசாரகர்கள் முழங்கி வருகின்ற போதும் கூட... ... -

அமைதி, ஆனந்தம், தனிமனித சுதந்திரம் என்றெல்லாம் ஆனானாப்படுத்தப்பட்டு வந்தாலும் கூட...

உண்மையில், மனிதர்கள் மனிதராக வாழ உரிமையில்லை. வாழ்விலே இன்பம் இல்லை. வாழ வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குவதாக இல்லை வாழ்க்கைத்தரம்.