பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


6

உண்மையில், அமைதியில்லை. ஆனந்தமில்லை. உற்சாகமில்லை. உழைப்போருக்கு உரிமையில்லை, உழைத்துத் தொலைக்க வேண்டுமே என்ற கடமைக்காக முணுமுணுத்தபடி உழைப்பிலே ஈடுபடுவோர் உயர மார்க்கமில்லை.

உண்மையில் வாழ்க்கை வாழ்க்கையாகவே யில்லை. வாழ்வின் நலங்கள் யாவை என உணரவே மனிதருக்குச் சந்தர்ப்பமில்லை. ஒய்வு இல்லை. வசதிகள் இல்லை. ஆகவே மனிதருள்ளங்களில் மகிழ்வு பொங்கிப் பிரவகிக்கவில்லை.

மக்களின் முகத்திலே கவலைக் கார்மேகம் கவிந்து விடுகிறது. அவர்கள் உள்ளத்தை ஆக்கிரமித்திருக்கும் அந்தகார நிலையை படம்பிடித்துக் காட்டுவது போல,

உலக அரங்கிலே உழைப்போர் பணமும் அதிகாரமும் பெற்ற ஒரு சிலரின் கைக்கருவிகளாக ஆட்டிவைக்கப் படுகிறார்கள். பொருள் இல்லாத காரணத்தால் உழைக்க முன்வந்து, தங்களையே அடிமையாக்கி - தங்கள் உழைப்பை, உடலை, காலத்தை எல்லாம் - ஒரு சில காசுகளை எறிகின்ற முழுமோச முதலாளிக்குப் பணயம் வைத்து, முதலாளியின் பணமூட்டையை கொழுக்கச் செய்கிற சாதனங்களாகி, தங்களைப் பற்றிய எண்ணமே இன்றி உழைத்துச் சாகிறார்கள். ஏன்?

மூச்சடக்கிக் கடலினுள் ஆழ்கின்றனர் மனிதர்கள். ஆபத்துக்கும் அஞ்சாது உயிரைத் துச்சமெனக் கருதி உலோகக் கனிகளில் - உழைக்கிறார்கள் ஒர் சிலர். யந்திரங்களோடு யந்திரங்களாக இயங்கி