பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


7

உழைக்கின்றார் மிகப்பலர். மனிதரை மனிதர் இழுப்பது வரை என்னென்ன தொழில்கள் உண்டோ அவ்வளவிலும் ஈடுபட்டு உழைக்கிறார்கள் பெரும் பாலோர். ஆனால் அவர்கள் இல்லாதவர்கள் தான் என்றும்! -

உணர்ச்சி இல்லாதவர்கள் அல்லர். பசித் துடிப்பு இல்லாதவர்கள் அல்லர். வாழவேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் அல்லர். வாழ்க்கை வசதிகள் பலவும் வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவர்கள் அல்லர் ஆனல், பணம் இல்லாதவர்கள் பகட்டிமினுக்கப் பட்டும் பட்டாடைகளும், நகைகளும், பவுடர்களும் ஹேராயில்களும், கண்ணாடிகளும், டம்பாச்சாரித் தனங்களும் இல்லாதவர்கள்:! அவற்றைப் பற்றிச் சிந்திக்கவே நேரம் இல்லாதவர்கள். ஓய்வு இல்லாதவர்கள். செத்துக்கொண்டே வாழ்வது தவிர வேறு வழி இல்லாதவர்கள் முழு வயிற்றுச் சாப்பாட்டுக்கும், கவலையற்ற கடனற்ற வாழ்க்கைக்கும் வகை இல்லாதவர்கள்.

உலகத்தின் மிகப் பெரும்பாலோர் இந்நிலையிலே வாழ்கிற போது - செத்துக்கொண்டே உடல் சுமந்து திரியும் போது - அதோ பாருங்கள்..... . பளபளக்கும் படிகத்துப் பாவை போன்றாளுடன் கட்டிலிலே புரள்வதற்கு முன்பாக ரத்தச் செந்நிறம் காட்டும் திராட்சை மதுக் குடித்துச் சொக்கிப் போகின்றானே, அவனைப் பாருங்கள். அவன் மேனியிலே ஏறியுள்ள மினுமினுப்பை கவனியுங்கள் கையிலே டாலடிக்கும் மோதிரத்தை, ரிஸ்ட் வாட்சை மேலே நெளிகின்ற ஸில்க் ஆடைகளை கவனியுங்கள். திமிரேறிய அவன் கையிலே