உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடி மனம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனவசியம்

9

அவருடைய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மனத்தைப் பற்றிய கருத்துக்களிலேயே ஒரு புரட்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறலாம். அவர் எவ்வாறு நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்தார் என்பதைப் பின்னால் கூறுகிறேன்.

பிராய்டு ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். மனப் பிரமை போன்ற உளநோய்களை ஆராய்வதிலே இவர் தம் நாட்டின் தலைநகரான வியன்னாவில் ஈடுபட்டிருந்தார். அவர் ஜோசப் பிராயர் (Joseph Breuer) என்பவரோடு சேர்ந்து உளநோய்களைக் குணப்படுத்தும் தொழிலை நடத்திவந்தார். பிராயர் இவருக்குச் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் துறையில் நுழைந்தவர்.

ஹிஸ்டிரியா என்னும் உளநோயைக் குணப்படுத்துவதற்கு பிராயர் மனவசிய முறையைக் கையாண்டார்.

நாம்பு மண்டலக் கோளாறுகளாலும், ஸ்திரமான மன நிலையற்றவர்களிடத்திலும் ஹிஸ்டிரியா உண்டாகிறது. நாம்புகளிலோ அல்லது உடலிலோ எவ்வித மாறுபாடும் ஏற்படுவதில்லை; இருந்தாலும் இந்த நோய் மட்டும் தோன்றுகிறது.

மன வசியம் என்பது யாராவது ஒருவரைத் தூக்கத்தைப் போன்ற ஒரு நிலையில் இருக்கும்படி செய்வதாகும். அந்தத் தூக்கத்திற்கு மனவசிய உறக்கம் என்று பெயர். மனவசியத்தைக் கையாளுகின்றவர் யாரை உறங்கும்படி செய்ய நினைக்கிறாரோ அவரிடம் மெதுவாகப் பேசித் தமது கருத்துப்படி நடக்கச் செய்துவிடுவார். எல்லோரையும் இவ்வாறு மனவசிய உறக்கத்தில் ஆழ்த்த முடியாது. அப்படிப்பட்ட உறக்கம் கொண்டவர்களிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/14&oldid=1004402" இலிருந்து மீள்விக்கப்பட்டது