பிராய்டின் ஆராய்ச்சி
31
கவர்ச்சியைப் பாலுந்தல் என்று பொதுவாகக் கூறலாம். பால் என்பது ஆண், பெண் என்ற பகுப்புக்குப் பொதுப் படையான பெயராக நிற்கின்றது. ஆனால் அதற்கு இங்கே விரிவான பொருள் உண்டு. அது ஆண் பெண் என்ற பிரிவினையை மட்டும் காட்டுவதில்லை. அவர்களுக்குள்ளே ஏற்படும் கவர்ச்சியையும், உடல் சம்பந்தமான இன்ப உணர்ச்சியையும், இனப் பெருக்க விருப்பத்தையும் அந்தச் சொல் குறிப்பாகக் காட்டுகிறது. காமம், காதல் என்றெல்லாம் பேசுகின்றோம். இணைவிழைச்சு என்று ஒரு சொல் பழைய நூல்களிலே வழங்குகின்றது. இவற்றின் பொருள்களை யெல்லாம் பால் என்ற சொல் தாங்கி நிற்கிறது. இந்த உந்தல்தான் மிக மிக வலிமை வாய்ந்தது. இதுவே வாழ்க்கை யமைப்புக்கு அடிப்படை என்பது பிராய்டின் எண்ணம்.
இந்தப் பாலுந்தலானது குழந்தைப் பருவத்திலேயே வேலை செய்கிறதென்று பிாாய்டு கூறினார். குமரப்பருவம் எய்துகின்ற காலத்தில்தான் திடீரென்று இந்தப் பாலுணர்ச்சி தோன்றுகிறதென்பது பொதுவாக அனைவரும் கொண்டிருக்கும் அபிப்பிராயம். அது குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறதென்று பிராய்டு கூறியதும் அவருடைய கொள்கைக்குப் பல எதிர்ப்புக்கள் தோன்றலாயின.
பிராயர் பிரிந்து போனபிறகு பிராய்டு தனியாகத் தமது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார். இவ்வாறு பத்தாண்டுகளுக்கு மேல் அவர் நடத்திய ஆராய்ச்சிகளின் பயனாக அவர் தமது கொள்கையை உறுதிப் படுத்த முயன்றார். 1905-ஆம் ஆண்டு வாக்கில் இவருடைய கொள்கைகளில் மற்ற உளவியல் அறிஞர்கள் விசேஷ கவனம் செலுத்தலானார்கள். அவற்றை எதிர்த்தவர்கள் கூட