உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடி மனம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிராய்டின் ஆராய்ச்சி

33

பாதையை வகுத்துக் கொண்டார். அதனால் அவர் பிய்ராடுடன் ஒத்துழைப்பதிலிருந்து விலகிக் கொண்டார்.[1]

ஆட்லருக்குப் பிறகு யுங்கும் பிராய்டை ஆமோதிப்பதிலிருந்து விலகலானார். ப்ளூயிலர் (Bleuler) என்பவரோடு சேர்ந்து யுங் சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜுரிக்கில் தொழில் செய்துவந்தார். அவர்கள் இருவரும் பிராய்டின் கருத்தை ஏற்று அதைப் பின்பற்றி மனநோய்களுக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள். உளப்பகுப்பியல் முறையை முதலில் பின்பற்றிய மனநோய் மருத்துவர்களில் இவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். யுங் தம்மைப் பின்பற்றுவதைக் கண்டு பிராய்டும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தாரென்று சொல்லவேண்டும். அமெரிக்காவிலுள்ள கிளார்க் பல் கலைக்கழகத்தில் சொற்பொழிவு கடத்த 1909-ல் பிராய்டு, யுங் ஆகிய இருவருக்கும் சேர்ந்து அழைப்புக் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் நெருங்கி ஒத்துழைத்து வந்தாலும் நாளடைவில் யுங்கின் கருத்தும் மாறுபடலாயிற்று. பாலுணர்ச்சியே பிரதானம் என்று பிராய்டு வற்புறுத்துவதை நாளாக நாளாக யுங்காலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பாலுணர்ச்சிதான் வாழ்க்கையின் போக்கை அமைக்கிறதென்றும், அதுவே வாழ்க்கையின் வேகமாக அல்லது உந்தலாக இருக்கிற தென்றும் பிராய்டு கூறுகிறாரல்லவா? இந்த உந்தலுக்கு அவர் லிபிடோ (Libido) என்று பெயர் கொடுத்தார்.

ஆகவே லிபிடோ என்பது பிராய்டின் கொள்கைப்படி பாலுணர்ச்சி உந்தலையே முக்கியமாகக் குறிக்கிறது. யுங்


  1. ஆட்லரின் கொள்கைகளைத் தாழ்வு மனப்பான்மை என்ற நூலில் விரிவாக விளக்கியிருக்கிறேன். ஆதலால் அதுபற்றி இங்கு சுருக்கமாகவே கூறியுள்ளேன்.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/38&oldid=1004432" இலிருந்து மீள்விக்கப்பட்டது