உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடி மனம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிராய்டின் ஆராய்ச்சி

35

மறைந்து கிடக்கின்றன என்று யுங் கூறலானார். இவ்வாறு கருத்து வேறுபடவே அவரும் 1913-லிருந்து பிராய்டை விட்டுப் பிரிந்தார்.

ஆட்லரும், யுங்கும் பிரிந்தது பிராய்டுக்கு வருத்தத்தை உண்டு பண்ணியிருக்கு மென்றாலும் அவர் தமது ஆராய்ச்சியின் பயனாகக் கண்ட முடிவை உறுதியோடு வெளியிடுவதிலிருந்து பின் வாங்கவில்லை. பாலுணர்ச்சியே வாழ்க்கையின் பிரதான உந்தல் என்ற எண்ணத்தை எவ்வகையிலும் தளர்த்திக் கொடுக்க அவர் இசையவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/40&oldid=1004431" இலிருந்து மீள்விக்கப்பட்டது