அதீத அகம்
51
ஆணையிடத் தொடங்கி விடுகிறது. அது தந்தையின் ஸ்தானத்தையே எடுத்துக் கொள்ளுவதாகக் கூறலாம். ஆசிரியனுடைய ஸ்தானத்தையும் கொள்ளுவதாகக் கூறலாம். இவ்வாறு அது அற வாழ்க்கைக்குத் தணிக்கை அதிகாரியான மனச்சான்றாகி விடுகிறது. அதீத அகம் தவறு என்று கண்டிக்கும்போது அகம் பயந்து போய்த் தனது இச்சைகளை அடக்கி விடுகிறது. அவ்வாறு அடக்குவதாலேயே பலவகையான மனக்கோளாறுகள் ஏற்படக் காரணமாகின்றது.
நனவிலி மனத்தைப்பற்றி பிராய்டு முதலில் கூறிய போது பலர் அவரைப் பாராட்டினார்கள். ஆனால் குழந்தையின் வாழ்க்கையிலும் பாலுந்தல்தான் பெரிய சக்தியாக இருக்கிறதென்றும், ஈடிப்பஸ் மனக்கோட்டம் உண்டாகிறதென்றும் பிராய்டு கூறத் தொடங்கியபோது அவருக்குப் பல எதிர்ப்புக்கள் தோன்றலாயின. முன்பு அவரை ஆமோ தித்தவர்களிலும் பலர் அவரைவிட்டு விலகினார்கள்.
அப்படி விலகிய போதிலும் பிராய்டு தமது முயற்சியில் தளர்வடையவில்லை. தமது கருத்துக்களை விளக்கியும், தமது பரிசோதனைகளை விளக்கியும் புதிய புதிய நூல்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.
முதல் உலக யுத்தம் முடிந்தபிறகு பிராய்டுக்குமேலும் மேலும் பாராட்டுதல்கள் கிடைத்தன. உலகம் முழுதும் அவரை அறியலாயிற்று. உளப்பகுப்பியல் எல்லாத் துறைகளிலும் இடம்பெற்றது. கல்வி, இலக்கியம், ஓவியம், நாடகம் இவற்றிலெல்லாம் இதைப் புகுத்தினார்கள். புதிய கலை இயக்கமே இதன் அடிப்படையில் வளரத்தொடங்கியது.
பிராய்டு ஒரு பெரிய மேதை. அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் மனத்தைப்பற்றிய கருத்துக்களில் ஒரு புதிய சகாப்தத்தையே உண்டாக்கி விட்டன.