பக்கம்:அடி மனம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
அடிமனம்மனம் மிக நுட்பமானது. அதிலே எப்படி எப்படியோ காரியங்கள் நிகழ்கின்றன; சிக்கல்களும், குமுறல்களும் ஏற்படுகின்றன. அதை ஆழ்ந்து கவனிக்கக் கவனிக்க அதிசயமான பல உண்மைகள் வெளியாகின்றன.

இரண்டாம் உலக யுத்த சமயத்திலே ஏற்பட்ட ஒரு சம்பவம் எனக்கு இந்த சமயத்திலே நினைவிற்கு வருகிறது. நான் அப்பொழுது கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள இராமகிருஷ்ண வித்யாலயம் என்ற சிறந்த குருகுலத்திலே சேவை செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை மூன்று மணியிருக்கும். ஓர் இளைஞர் இடுப்பிலே ஒரு கெளபீனத்தோடு மட்டும் வேகமாக ஓடிவந்து வித்யாலயக் கோயிலுக்குள்ளே புகுந்து கொண்டார். அவரை வெளியே வரச் செய்வது பெரும்பாடாகப் போய் விட்டது. “ஹிட்லர் எலக்டிரானிக் அலைகளைப் பிரயோகம் செய்து விட்டான். உலகமே அழியப் போகிறது. அதைத் தடுக்க வேண்டுமானால் இராமகிருஷ்ணரால்தான் முடியும்” என்று அவர் பயந்த குரலில் கத்தத் தொடங்கிவிட்டார்.

அந்த இளைஞரை எனக்கு முன்பே தெரியும். நாட்டுப் பணியிலே நல்ல ஆர்வமுடையவர் அவர். வயது சுமார் இருபத்தைங்து இருக்கும். எப்படியோ அவர் உள்ளம் திடீரென்று பேதலித்து விட்டது. சொக்காயையும் இடுப்பு வேட்டியையும் களைந்தெறிந்து விட்டுக் கையிலிருந்த கதர்ப்பையைக் கிழித்துக் கௌபீனமாகக் கட்டிக்கொண்டு காடு காடாகச் சுமார் ஐந்து ஆறுமைல் ஓடிவந்திருக்கிறார். அன்புருவமாக விளங்கும் இராமகிருஷ்ணரிடத்திலே மட்டும் எப்படியோ நம்பிக்கை அந்தப் பேதலித்த நிலையிலும் இருந்திருக்கிறது. யுத்தத்தைப் பற்றிய செய்திகளும் ஜெர்மானியர் புதிது புதிதாகப் பயன்படுத்திய அழிவுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/9&oldid=1004397" இருந்து மீள்விக்கப்பட்டது