பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

திக்கித் தடுமாறிக் கொண்டு பேசுதல்

திக்கித் திணறிக் கொண்டு பேசுதல்

திக்கியும் தெற்றியும் பேசுதல்

திக்குக் கெட்டுத் திசைமாறிப் போதல்

திக்குத் திகாந்தம் எல்லாம் (வெடித்தன) (கல்கி)

திக்குத் திசை தெரியாமல் திண்டாடல்

திக்குத் திசை புரியாமல் திகைத்து நிற்றல் (கல்கி)

திக்கு முக்காடித் திணறல்

திக்குமுக்காடுதல்

திகைத்துத் தடுமாறி நிற்றல்

திகைத்துத் திண்டாடல்

திகை திகைத்துக் கலங்குதல் (பாரத நாடகம்)

திகைப்பும் வியப்புங் கொள்ளுதல்

திகைப்பும் விழிப்பும் முகத்தில் தோன்ற (கல்கி)

திங்களுஞ் செங்கதிரும் மங்குலுந் தங்குமுயர் பரங்

குன்று (திருப்பு 14)

திட்டமாகத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு பேசு

(அண்ணா)

திட்டமாகவும் தெளிவாகவும் கூறுதல்

திட்டவட்டமாகச் சொல்லி விடுதல் ; தெளிவுறுத்தல்

திட்டவட்டமான பதில்

திட்டுத் திட்டான திடல்கள்

திட்டுத் திடலுமாயிருக்கும் மேட்டுப்பாங்கான நிலம்

திட்டும் திடலுமாயிருக்கும் வழி

திட்டுமுட்டு - சபிப்பு, எதிர் நிந்தனை

திட்டுமுட்டுக்கள் உள்ள காடு

திட்ப நுட்பஞ் செறிந்த நூல்

திட்ப நுட்பத் தெரியாதவர்

திட்பநுட்ப வேலைகள்