பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

திட்பமும் நுட்பமும் செறிந்த கவிதை

திடுக்கிட்டுத் திகைத்து நின்றுவிடல்

திடு திடென நடுங்குதல்

திண்டாடித் தவித்தல்

திண்டாடித் திணறிப் பேசுதல்

திண்டு தலையணை போட்டுப் படுத்துக் கொள்ளல்

திண்டு முண்டு (- தில்லு முல்லு ) பண்ணுதல்

திணறித் திண்டாடிவிடும்படி செய்துவிடல் (கல்கி)

தியங்கி மயங்கல்

தித்தித்திருக்கும் இன்பத் தெள்ளமுது (குற் உ 190)

தித்தித்திருக்குந் திவ்விய தேன் (குன்றக் 43)

தித்தியா நின்ற தெய்வத் தெள்ள முதனைய தீஞ்சொல்

(பாகவதபு 4-3-4)

தியங்கி மயங்கிக் கலங்கி நிற்றல்

தியங்கினார் மயங்கினார் திகைத்தார் (கம்ப 6-3605)

திரைந்து சுருங்கிய

திரையோடும் நுரையோடும் கரை மோதிச் செல்லும் ஆறு

திரித்து முறுக்குதல்

திருக்கி முறுக்கிக் கொண்டிருக்கும் நூல்

திருகல் முருகல் - கோணல்

திருகல் முருகலாய் இருக்கும் கொம்பு

திருகலும் முருகலுமாகக் கிடக்கும் கயிறு

திருகி முறுக்குதல்

திருட்டுப் புரட்டு இல்லாத ஊர்

திருத்தகு செல்வமும் சிறப்பும் உடையவன் (நைட

422)

திருத்திப் பண்படுத்தல்