பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின் திருநகர் (நெடு

நல் 89)

திருவருட் பெருந்துணை கொண்டு செயல் செய்தல்

திருவுங் கல்வியுஞ் சீருந்தழைத்தல் (விருத்தாசலபு)

தில்லியம் மில்லியம் - தில்லுமுல்லு

தில்லுமுல்லுகள் செய்தல் - ஏமாற்றுச் செய்தல்

திலகந்தை இய தேங்கமழ் திரு நுதல் (முறுகாற்றுப் 24)

திறமையாகவும் சாமர்த்தியமாகவும் செய்தல்

திறனும் தகுதியும் உடையவர்

தீங்கதிர் மதி ஏய்க்கும் திருமுகம் (கலித் 15)

தீங்கனிக் குதலைச் செவ்வாய்ச் சிறுவன் (கூர்மபு 29-42)

தீங்குழலின் மதுரங்கனிந்த பசுங்கு தலை மழலை (குமர

45)

தீட்டிக் கூராக்கல்

தீது அவித்து அரிதின் செய்த செய்தவச் செல்வம்

(கம்ப 4-2-21)

தீயோரும் பேயோரும் இருக்குமிடம்

தீரத்துடனும் பிடிவாதத்துடனும் காரியம் செய்தல்

தீரத் தெளியச் செவ்வையாய்ப் படிக்காமல் (கிருஷ்ண

பிள்ளை)

தீரமும் கம்பீரமும்

தீராதி தீரர் (பாரதிதா - கவி 1)

தீவிய மழலைச் செவ்வாய்ச் சிறுவர் (பாகவதபு 5-1-14)

துக்கம் ஒருபக்கம் வெட்கம் ஒருபக்கம் பிடுங்கித் தின்ன

துக்கமும் வெட்கமும் தரக்கூடிய சொல் ; செயல்

துட்டு துக்காணி கையில் இருக்கவேண்டும்

துடித்துப் பதைத்தலறித் துள்ளிப்புரண்டார் (பஞ்ச

வனவாசம் 4)

துடித்தெழுந்து தோள் தட்டி ஆர்ப்பரித்தல்