பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

துடிதுடித்துத் துன்புறும்

துடி துடிப்பும் படபடப்பும் கொண்ட

துடிப்பும் துறு துறுப்பும் உடைய

துடியாய்த் துடித்தல்

துடுக்காகவும் மிடுக்காகவும் பதில் சொல்லல்; பேசுதல்

துடுக்கும் குறும்புத்தனமும் உடையவன்

துடுக்கும் துட்டத்தனமும் உடையவன்

துடுக்குடன் வெடுக்கென்று பதில் சொல்லும்

துடுக்குத்தனமாய் வெடுக்கென்று பேசுதல்

துடைத்து நீக்குதல்

துண்டு துடக்குகளாய் கிடைத்தல்

துண்டு துணுக்குகளாக நறுக்குதல்

துண்டுந் துடக்குமாகக் கிடக்கும் பொருள்

துண்டுந் துணியுமாய்க் கிடந்த போர்வீரர்களின்

சவங்கள்

துணிச்சலும் தைரியமும்

துணிச்சலும் மனவுறுதியும் உடையவர்

துணிமணிகளை (ஆடைகளை) அணிதல்

துணிவாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுத்தல்

துதித்துப் புகழ்தல்

துதைந்து செறிந்த

துப்புத்துரவாக (- துப்புரவாக) வீட்டை வைத்திருத்தல்

துப்புத்துரிசு மாசுமறு இல்லாமல்

துப்புரவுந் தூய்மையுமுடைய

தும்பு துரும்புகள் இல்லாமல் சுத்தம் செய்தல்

தும்பு தூசிகளைத் துடைத்தெறி

துயரமும் துக்கமும்

துயருழந்து அழுங்கி மாழ்குதல் (கம்பர்)

7