பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

துரதிர்ஷ்டமும் துன்பமும்

துரும்பும் தூசியும் மிக்க இடம்

துருவித் தேடுதல்; குடைந்து பார்த்தல்

துலக்கித் துப்புரவு செய்து

துவரத் துறந்த துறவோர்

துள்ளிப் பதைத்துத் துடி துடித்துப் பதறுதல்

துவைத்து மிதித்து ஓடியது கூட்டம்

துள்ளித் திரிகின்ற காலத்தில் துடுக்கடக்கிப் பள்ளிக்கு

வைத்தல்

துள்ளித் துடித்தல் - மிகுதுயரால் வருந்துதல்

(சுடுமணலில்) துள்ளித் துடித்துவிட்ட பையன்

துளிதூங்கு தெள்ளமுத வெள்ளருவி (குமர 71)

துளிமலி துயரமொடு அரும்படர் உழத்தல் (ஐங்குறு

477)

துளைத்து ஊடுருவல்

துறவு நெறி பூண்டு தூயவாழ்வு வாழ்தல்

துன்பங்களும் துயரங்களும் மலிந்த உலகம்

துன்பமும் துயரமும் அனுபவித்தல் (கல்கி)

துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ் செய்தல் (பிரதாப

அதி 8)

தூங்காமல் தூங்கிச் சுகித்திருத்தல் (வைண 2-10)

தூங்கி விழுந்து கொண்டிரு, தூங்கி வழிந்து கொண்டிரு

தூசி துப்பட்டைகளைத் துடைத்துத் தூய்மையாக்கு

தூசி துப்பு இல்லாமல் துடை

தூசியும் புழுதியும் மண்டிய

தூசு தும்பட்டம் இல்லாமல் துடைத்தல் (புதுமைப்)

தூசு தும்பு துடைத்துச் சுத்தம் செய்தல்

தூண்டிக் கிளப்பிவிடுதல்

தூண்டித் துருவிக் கேட்டல்