பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தெள்ளு தெண்டிரைக் கருங்கடல் (நைட 318)

தெளிவாகவும் திட்பமாகவுங் கூறுதல் (நெடுஞ்செழி)

தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசல், சொல்லுதல்

தெளிவாகவும் விளக்கமாகவும் கூறல்

தெளிவான திட்டமான பதில்

தெளிவும் தெம்பும் பெற்றிருத்தல்

தெளிவும் விளக்கமும் உடைய உரை

தேக்கித் தெவிட்டுப்போன விருந்தினர்

தேங்கனிந்து ஒழுகு தெள் இளி (காசிகண் 8-9) (இளி-

இசை)

தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை (ச 174-3)

தேசுகண் படுக்குஞ் செல்வத்திரு நகர் (கூர்மபு 29-213)

தேடித்தேடித் திரிந்து எய்த்தல் (சுந் 5-5)

தேடியோடித் திரிதல் பெருமுயற்சி செய்தல்

தேடியோடிப் பிடித்தல்

தேய்ந்து நைந்து குறைதல்

தேய்ச்சு மாய்ச்சுப் போடுதல் - சிறுகச் சிறுகச் செல

விட்டு வீணாக்கல்

தேய்ந்து மங்கிப்போன

தேய்ந்து மாய்ந்து போதல் - கவலையால் உடைமெலி

வுறல்

தேய்ந்து மெலிதல்

தேர்ந்து தெளிதல்

தேம்பலும் விம்மலும் பொங்கிவரல் (கல்கி)

தேம்பித் தேம்பி அழல்

தேமதுரத் தீஞ்சுவையாய்ச் செந்தேனுமாய் வெண்

பாலாய்த் தித்தித்தல் (வைண 2-500)

தேமேவும் மதுரம் பழுத்து ஒழுகும் மென் மொழித்திரு

(திருப்போரூர். பி த 2)