பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

நலிந்து பொலிவு இழந்த

நலிந்தும் வலிந்தும் பொருள் கொள்ளுதல்

நலிந்து மெலிந்திருத்தல்

நலிவும் மெலிவும் இல்லாத

நலிவுற்று நாசமடைதல்; பொலிவற்றிருத்தல்

நலிவெல்லாம் நலித்தருளும் நம்பன் (செந் மு சந்

41-2-)

நலுங்காமல் குலுங்காமல் செல்லுதல்

நவ்வு சுவ்வு - நழுவு சுளுவு, நன்மை தீமை, இதா

கிதம், நய நட்டம்

நவநாகரிக நாரீமணிகள்

நழுவு சுளுவு (- நன்மை தீமை) அறிந்திருத்தல்

நற்குணம் நிறைந்த கற்புடை மனைவி (குமர 452-26)

நற்குண நற்செயல்களால் மாண்புற்ற

நற்குணமும் நன்னடக்கையுமுள்ள

நற்பு திற்பு - நன்மை தீமை

நறுக்குப் புறுக்கெனல் - வெந்ததும் வேகாததுமான

உணவாயிருத்தல்

நறுகு முறுகென்றிருக்கும் - பொறாமையுடனிருக்கும்

நறுமொறுத்தல் - பொறாமை அடைதல்

நன்மணம் பெற்ற பொன்மலர் ஒப்பார்

நன்மை தின்மை - நன்மை தீமை, சுபாசுபம், காரிய

காரியம்

நன் மொழியும் இன் மொழியும் நவிலும்

நன்றி கொன்ற பாவி

நன்னூல் முதலிய சின்னூல்கள் (பெ. தொகை 1719)

நனவிலுங் கனவிலும் நினைவிலுந் தோன்றும் (ச 279-

1)

நாகரிகமும் பண்பாடும் உள்ளவர்