பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

நாசமுற்று அழிதல்

நாட்டி நிலை நிறுத்தல்

நாட்டிலும் காட்டிலும் வாழும் மக்கள்

நாடறிய நன்மணஞ் செய்தல்

நாடித் தேடிக் கண்டு பிடித்தல்

நாடி நரம்புகளுக்கு முறுக்கேற்றல்

நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்து (புறம் 35)

நாடு நகரெல்லாம் அலங்காரமாயிருத்தல்

நாடும் நகரும் அறியும்

நாணமும் இல்லை மானமும் இல்லை

நாணயமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொளல்

நாணயமும் நல்லொழுக்கமும் உடையவர்

நாணயமும் நேர்மையும் இல்லாதவர்

நாணிக் கூசிக் குறுகுதல்

நாணிக் கோணி நிற்றல்

நாத்திகம் பேசி நாத்தழும் பேறல் (திருவா)

நாதமு நாதாந்த முடிவும் நவை தீர்ந்த போதமுங்

காணாத போதம் (குமர 1-2)

நாய் நரிகள் ஊளையிடும் காடு

நாயினுங் கடையாய் நலிவோர்

நாயும் பேயும் போன்ற தீயோர்

நாவன்மையும் பாவன்மையும் படைத்தவர்

நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் (தீஞ்சொல் -

மழலை) (அகம் 16)

நாவொடு நவிலா நகைபடு மழலை (பெருங்க 1-36-

266)

நாள் நட்சத்திரம் பார்த்தல்

நாளுங் கோளும் நம்மை என் செய்யும்?