பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம் (நெடு

நல் 95)

நிலைகுலைந்து மதிமயங்கி நின்று பரிதவித்தல் (மீனாட்சி

தோத்திரம் 8)

நிலைகுலைந்து மயங்கி அலைந்திடல்

நிலை கெட்டு உலைதல்

நிவந்து எழுதரும் ஞாயிறு புறம் 41)

நிறுத்தி நிலையில் இருத்தல்

நிறைந்து வழிந்தோடும்

நிறை முறையுடன் நடத்தல்

நிறையும் நாணும் நலனும் நிறைந்த நங்கையர்

நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை (கலித் 33)

நிறைவு குறைவு ஒழிவற நிறைந்தெங்கும் நிற்ப(வன்)

(திருப்பு)

நின்ற இடத்திலேயே நின்று விடல்

நின்று நிதானித்து காரியத்தில் இறங்கு

நின்று நிறுத்தி நிதானமாகப் பாடுதல்

நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து தொழுந்

தொழும்பனேன் (திருவா 209)

நினைந்து நைந்து நெக்கு நெக்கு உளங்குழைதல்

(திருவாவி பதிற் அந் 12)

நினைப்போர் நெஞ்சம் நீங்காது குடி கொண்ட நிமலன்

(செந் மு சந் 42-2)

நினைவிலும் கனவிலும் மறவா திருத்தல்

நீக்கமின்றி எங்கும் நிறைந்த இறைவன்

நீக்கவோ போக்கவோ மறவாத

நீக்கு போக்குத் தெரியாதவன்

(நெஞ்சில்) நிலையாக நிலை பெற்றிருத்தல்

நீங்காத நிழல் போல் நேசமாயிருத்தல்