பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

நுட்பமும் ஒட்பமும் உடைய,நுட்பமும் நுண்மையும் உடைய
 
நுடங்கிய நுண் இழை நுசுப்பினாள்

நுடங்கியும் மடங்கியும் இருத்தல்

நுண்ணறிவும் நூலறிவும் உடையவர்

நுண்ணிய உயர்ந்த ஆழ்ந்த கருத்துக்கள்

நுண்ணுணர்வும் நூலறிவும் சாலப்பெற்ற

நுண்மாண் நுழைபுலம்

நுண்மதி நுணுகாப் பெண்மதி (பெருங்க 1-40-320)

நுண்மையும் நுட்பமும் உடைய

நுண்மையும் நுணுக்கமும் உடைய

நுண்மையும் நொய்ம்மையும் உடைய

நுணங்கி நுடங்கிய

நுணங்கிய கேள்வியும் வணங்கிய வாக்கும் (வாயும்) உடையவர்

நுணங்கு நுண்பனுவற் புலவர் (அகம் 345)

நுப்பும் நுரையுமாக ஓடும் நீர்

நுரைப்பால் முகந்தன்ன நுண் துகில் (தஞ்சை. கோ.217)

நுரையும் நொங்குமாகப் போகும் ஆறு (கல்கி)

நுரையென விரிந்த நுண்பூங்கலிங்கம் (சிலப் 22-21)

நூல்வழி நுனித்த நுழைநுண்ணறிவினர் (பெருங்க 1-5-102)

நூல்களை ஓதி நுணுகிய நுண்ணுணர்வினை யுடையவர்

நூல்வினை நுனித்த நுண் தொழிலாளர் (பெருங்க 1-34-143)

நூலறிவும் நுண்ணறிவும் உடையவர்

நெக்கு நெக்குடைதல்-

நெக்கு நெக்குருகி நிற்றல்