பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


நெகிழ்ந்து இளகும் மனம்

நெகிழ்ந்து உருகுதல் ; தளருதல் ; மனமிளகுதல் நிலை குலைதல்

நெகிழ்ந்து நெக்குருகும் மனம்

நெஞ்சக் கனகல்லும் நெக்குநெக்குருகப் பாடுதல்

நெஞ்சங் குழைந்து நெக்கு நெக்குருகல் (குமர 559)

நெஞ்சத்தில் கொஞ்சமும் வஞ்சம் வைக்காத ; அஞ்சு தல் கொள்ளாத

நெஞ்சத்தில் வஞ்சகம் உடைய

நெஞ்சத்தில் கொஞ்சமும் சஞ்சலமில்லா திருத்தல்

நெஞ்சம் நெக்குருகுகிறது

நெஞ்சம் வெந்து நொந்து துள்ளித் துடித்தல் (கிருபானந்த வாரியார்)

நெஞ்சாலும் நினைப்பாலும் நெறியாலும் (சைவர்) ஆகத் திகழ்தல் (ம.பொ.சி.)

நெஞ்சு நடுக்குற்று அஞ்சுதல்

நெஞ்சு பதைத்துப் பதறுதல்

நெஞ்சுரமும் நேர்மைத் திறனும் உடையவர்

நெஞ்சுலர்ந்து நாவறண்டு நினைவு தடுமாறுதல் (காத்-தவராயன் கதை 1-27)

நெஞ்சைத் தொடும் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை

நெட்ட நெடிதாய் நீண்ட

நெட்ட நெடுகலான பாறை (புதுமைப் )

நெட்டு நெடுகலாகச் செங்குத்தாக இருக்கும் பாறை (புதுமைப்)

நெட்டை கட்டை (-கூடுதல் குறைதல்) இருந்தாலும் சரியென்று இருத்தல்

நெட்டை நெடுமரம்

நெடிது இனிது வாழ்க