பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5


அடிப்படுத்து ஆளுதல்

அடிப்பும் அணைப்பும் அளித்தல்

அடிபட்டு உதைபட்டுச் செத்துப் போதல்

அடிபட்டும் மிதிபட்டும் அல்லலுறல்

அடிபரவித் தொழுதேத்தி ஆண்டவனை வணங்குவார்

அடி பிடி சண்டை

அடிமுதல் முடிவரை; முடிகாறும்

அடிமை முதல் அரசன் வரை

அடியற்ற மரம் போல அலறி விழுதல்

அடியும் உதையும் பெறுதல்

அடியும் முடியும் காண்டற்கரியவன் (சிவபிரான்)

அடியும் நுனியும் அறியா திருத்தல்

அடியோடு ஆணிவேருடன் களைந்தெறிய வேண்டும்

அடி வயிற்றில் இடிவிழுந்தாற் போலாதல் (சந்திரிகா - 12)

அடித்து நொறுக்குதல்

அடுக்கடுக்காய் அடுக்கல்

அடுகிடை படுகிடையாய்க் கிடத்தல் -(1) படுத்துக் கொள்ளல். (2) நோய்வாய்ப்படுதல்

அடுத்தவர்களுக்கு அருள் செய்கின்ற ஆண்டவன் (மனு முறை)

அடுத்துக் கெடுத்தல் - நம்பிக்கைத் துரோகம் செய்தல்

அடுத்து மடுத்துக் கேட்டல்

அடுத்தோரை ஆதரிக்கும் அருங்குணச் செல்வர்

அடுதீ யல்லது சுடுதீ யறியா நாடு - (புறம் 70)

அடுப்பும் துடுப்புமாய் இருத்தல்-சமைத்துக் கொண் டிருத்தல்

அடைக்கப் புடைக்க நடத்தல் - விரைவாக நடத்தல்

அடையலும் விடியலும் குருடனுக்கு ஏது